10 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தையை கொடுத்துட்டு என் புருஷன் உயிரை எடுத்துட்டியே கடவுளே! கதறும் மனைவி!

By vinoth kumar  |  First Published May 31, 2024, 9:40 AM IST

விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சாரதி(28). இவரது மனைவி சத்தியபிரியா(27). இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. 


விழுப்புரத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம் அடைந்து நிறைமாத கர்ப்பணியாக இருந்த நிலையில் தந்தையின் இறுதி சடங்கில் குழந்தை பிறந்தது. 

விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சாரதி(28). இவரது மனைவி சத்தியபிரியா(27). இந்த தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு சத்தியபிரியா கர்ப்பம் அடைந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருந்து வந்தனர். தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: Summer Leave Extension: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறை நீட்டிப்பு! வெளியான அறிவிப்பு!

இந்நிலையில், கடந்த 23ம் தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்டுவதற்காக சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீளமான கம்பியை தூக்கிச் சென்ற போது உயரழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சாரதி படுகாயமடைந்தார். இதில் படுகாயமடைந்த அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார். 

இதையும் படிங்க: சினிமாவில் அத்திபட்டி! நிஜத்தில் மீனாட்சிபுரம்! ஒரு ஆளில்லா கிராமம்! எந்த மாவட்டத்தில் இருக்கு தெரியுமா?

அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நேற்று காலையில் இறுதிச்சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல் சத்தியபிரியா கதறி துடித்த சம்பவம் காண்போர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.

click me!