ஆந்திராவில் இருந்து சுற்றுலா வந்த பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பேருந்து விபத்தில் சிக்கிய நிலையில், ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏறையூர் பாளையம் பகுதியில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 34 பெண் சுற்றுலாப் பயணிகள் உட்பட 45 பேர் சுற்றுலாவுக்காக தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் நேற்று இரவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பின்னர் ஸ்ரீரங்கம் செல்வதற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென ஓட்டுனர் போம்ஸ்வரராவ்க்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்தில் இருந்த பெயர் பலகை கம்பத்தில் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் ஓட்டுனர் போம்ஸ்வரராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த எலவனாசூர் கோட்டை போலீசார் விரைந்து சென்று அந்த பயணிகளை மீட்டு அவர்களை பாதுகாப்பாக ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பஞ்சாயத்து ஓவர்; ஓசி டிக்கெட் பிரச்சினைக்கு முடிவு கட்டிய போக்குவரத்து, காவல்துறை செயலாளர்கள்
மேலும் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வந்த பேருந்தில் ஓட்டுனருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விபத்துக்குள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
63 கோடி பேருந்து நிலையம்; ஸ்டண்ட், ரேஸ் டிராக்காக பயன்படுத்தும் இளசுகள் - பொதுமக்கள் வேதனை
மேலும் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் அழைத்துச் செல்ல மாற்று பேருந்து ஆந்திராவில் இருந்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்து வரும் வரை தனியார் மண்டபத்தில் சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு காத்திருக்கும் சூழ்நிலையில் காண்பவர்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.