7 வருட காதலி வேறு ஒருவருடன் ஓட்டம்.. திருமணமான 3 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை.!

Published : Jun 29, 2022, 03:11 PM ISTUpdated : Jun 29, 2022, 03:13 PM IST
7 வருட காதலி வேறு ஒருவருடன் ஓட்டம்.. திருமணமான 3 நாட்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை.!

சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன்(26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல்  கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால், இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 23ம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே, அந்தபெண் வேறு ஒரு நபருடன் காதல் ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார்.

7 வருட காதலி வேறு ஒருவருடன் ஓடியதால் திருமணமான 3 நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன்(26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல்  கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால், இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 23ம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே, அந்தபெண் வேறு ஒரு நபருடன் காதல் ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார்.

இதையும் படிங்க;- பைக் மீது மணல் லாரி பயங்கர மோதல்.. தூக்கி வீசப்பட்ட 4 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

இதனால், உறவினர்கள் அவசர அவசரமாக ஏப்பாக்கத்தில் உள்ள குமரேசனின் அத்தை மகளை அதே தேதியில் அதே திருமண மண்டபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.  திருமணத்துக்கு பிறகு குமரேசன் பெண்ணின் வீட்டிற்கு  மறுவீடு செல்லாமல் அவரது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி மதியம் புதூர் கிரமாத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்ற குமரேசன் வயலில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்து வெள்ளிமேடு பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் குமரேசன் தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க;-  திமுக பெண் கவுன்சிலர் மண்டையை உடைத்த மாமியார்.. மடிப்பாக்கம் செல்வத்தின் மனைவிக்கு நடந்தது என்ன?

அந்த வீடியோவில் தான் 7 வருடங்களாக காதலித்து வந்தததாகவும் திருமணத்திற்கு சம்மதம் கூறி நிச்சயம் வரை வந்து அந்த பெண் வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பெண்ணுடன் பழகிய தருணங்கள் தன்னை மிகுந்த  மனஉளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் இனி வேறு ஒரு நபருக்கு இதுபோன்ற செயல் நடைபெறக்கூடாது எனவும் வீடியோவில் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க;-  மகனுக்காக ஊரார் காலில் விழுந்து உயிரை விட்ட தந்தை.. சினிமாவை விட கொடூரமாக நடந்த நிஜ சம்பவம்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!