நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் அடாவடியாக மூட்டைக்கு 50 முதல் 55 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊழியர் நீக்கம்

By vinoth kumarFirst Published May 15, 2022, 1:53 PM IST
Highlights

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் செஞ்சியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் விவாசாயிகளிடம் லஞ்சம் கேட்டால் கடுமையாக தண்டனை கிடைக்கும் என அதிகாரிகளை எச்சரித்திருந்தார். 

செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 50 முதல் 55 ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆடியோ வைரலானதை அடுத்து ஊழியர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம்  மாவட்டத்தில் 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.  நெல் கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் செஞ்சியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் விவாசாயிகளிடம் லஞ்சம் கேட்டால் கடுமையாக தண்டனை கிடைக்கும் என அதிகாரிகளை எச்சரித்திருந்தார். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே லஞ்சம் பெற்றுக்கொண்டு விவசாயிகளை அலைகழிப்பதாகவும், குளறுபடிகள் நடப்பதாகவும் புகார்கள் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக விவசாயிகளிடம் அரசு அதிகாரி உதவியுடன் அங்கு வேலை செய்யும் கிருஷ்ணன் என்பவர் விவசாயிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது. 

அதில், தாங்கல்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரிடம் மூட்டைக்கு 50 முதல் 55 ரூபாய் வரை பேரம் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியதில் குற்றம் உறுதியானது அடுத்து அரசு ஊழியர் பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

click me!