ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம்.. தவறி விழுந்த 2 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

Published : Apr 16, 2022, 02:56 PM ISTUpdated : Apr 16, 2022, 03:03 PM IST
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம்.. தவறி விழுந்த 2 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!

சுருக்கம்

சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக காரைக்குடி செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் நேற்று மாலை விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரயில்வே கேட் அருகே வந்தது. அப்போது ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த 2 பேர் திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர்.

விழுப்புரம் அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படியில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர்கள் 2 பேர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக காரைக்குடி செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில் நேற்று மாலை விழுப்புரத்தை அடுத்த சிந்தாமணி ரயில்வே கேட் அருகே வந்தது. அப்போது ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த 2 பேர் திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர். இதில், அவர்கள் இருவரும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த ரயில்வே கேட் கீப்பர், இதுபற்றி விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் அருண்(22), மற்றொருவர் முசிறியை சேர்ந்த தினேஷ் குமார் (30) என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு பயணம் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையும் படிங்க;- எவ்வளவு கெஞ்சியும் விடாத மாமியார்.. மருமகனை கதற விட்ட தரமான சம்பவம்.. அதிர்ச்சியில் மகள்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!