கொஞ்சம் கூட அடங்காத பள்ளி மாணவர்கள்.. மாணவர் ஒருவர் சக மாணவர்களை துடப்பத்தால் தாக்கும் காட்சி வைரல்.!

By vinoth kumar  |  First Published Apr 4, 2022, 1:30 PM IST

அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, நடுரோட்டில் நடனமாடுவது, பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, ஆசிரியர்களை தாக்குவது,  பைக் ரேஸ் போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


திண்டிவனம் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் ஒருவர் சக மாணவர்களை துடப்பத்தால் அடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை விட நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, நடுரோட்டில் நடனமாடுவது, பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, ஆசிரியர்களை தாக்குவது,  பைக் ரேஸ் போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை ஒன்றில் மாணவர் ஒருவரை சக மாணவர் துடைப்பம் கொண்டு தாக்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது. அதோடு, வகுப்பறையில் இருந்த மின்விசிறி, ஸ்விச் போர்டு ஆகியவற்றையும் மாணவர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சம்பவம் இப்பள்ளியில் அரங்கேறி வருவதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர். 

click me!