ரகசிய திருமணம் செய்துவிட்டு திரும்பிய போது பயங்கரம்.. சென்டர் மீடியனில் பைக் மோதல்.. காதலன் பலி, காதலி சீரியஸ்

By vinoth kumar  |  First Published Mar 19, 2022, 7:38 AM IST

தன் காதலியான கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரிய செருவத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்த தேவன் மகள் சந்தியாவுடன்(19) பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் நவீன்குமார் சென்றார். பின்னர், யாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். 


வீட்டுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காதலன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். காதலி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரகசிய திருமணம்

Tap to resize

Latest Videos

undefined

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் நவீன்குமார்(23). பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்து விட்டு போலீசில் சேருவதற்காக தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். கபடி வீரரான நவீன்குமார் நேற்று அதிகாலை தனது தாய் ரேவதியிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கபடி போட்டியில் பங்கேற்க செல்வதாக கூறி விட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். 

இதையும் படிங்க;- கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் மணப்பெண் சுவர் ஏறி குதித்து காதலுடன் ஓட்டம்? கதறி துடித்த கணவன்..!

இதைத்தொடர்ந்து தன் காதலியான கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரிய செருவத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்த தேவன் மகள் சந்தியாவுடன்(19) பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் நவீன்குமார் சென்றார். பின்னர், யாருக்கும் தெரியாமல் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். 

சென்டர் மீடியனில் மோதல்

பின்னர் வாலிகண்டபுரம் அடுத்த தேவையூர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தூக்கி வீசப்பட்டு சந்தியா சுயநினைவு இழந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதையும் படிங்க;- அரசு பஸ்ஸில் போன ஐஏஎஸ் மாணவி.. பின் பக்கமாக தொட்டு ஓயாத பாலியல் தொந்தரவு.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

காதலன் பலி, காதலி சீரியஸ்

உடனே இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நவீன்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த சந்தியாவை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். 

click me!