கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (26). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், புகைப்பட கலைஞரான மணிகண்டனுக்கு பேஸ்புக் மூலம் பூமிகா என்ற அறிமுகமாகியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் சினிமா பட பாணியில் பேஸ்புக்கில் அறிமுகமான இதய நோய் பாதித்த காதலி உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் காதலன் எலி மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் காதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (26). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் புகைப்பட கலைஞர் ஆவார். இவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டூடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், புகைப்பட கலைஞரான மணிகண்டனுக்கு பேஸ்புக் மூலம் பூமிகா என்ற அறிமுகமாகியுள்ளார். முதலில் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், இருவரும் நேரில் சந்திக்காமல் தனது காதலை வளர்த்து வந்துள்ளனர். காதலி பூமிகா இதய நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்தும் மணிகண்டன் அவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.
இதய நோயால் காதலி உயிரிழப்பு
கடந்த சில நாட்களாகவே பூமிக்காவின் செல்போனில் இருந்து எந்த போன்காலும் வரவில்லை. இதனால் பூமிகாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர் பரிதவித்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பூமிகாவின் பாட்டி போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது பூமிகா தொடர்பாக விசாரித்த போது இதய நோய் பாதிப்பு காரணமாக பூமிகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
அதிர்ச்சியில் எலி மருந்து சாப்பிட்ட காதலன்
இதனையடுத்து, கடந்த 2ம் தேதி எலி மருந்து சாப்பிட்ட மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.