பேண்டு வாத்தியம் முழங்க நூற்றுக்கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட போது யூனிபார்மில் அரசு பள்ளி மாணவி முதுகில் புத்தக பையை மாட்டிக்கொண்டு ஐந்து நிமிடம் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்த நிலையில், பலரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அரசு பள்ளி மாணவிகள் பேருந்தில் பீர் குடித்த சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நடுரோட்டி பள்ளி மாணவி ஒருவர் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் எம்.ஜி.சாலை வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, பேண்டு வாத்தியம் முழங்க நூற்றுக்கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட போது யூனிபார்மில் அரசு பள்ளி மாணவி முதுகில் புத்தக பையை மாட்டிக்கொண்டு ஐந்து நிமிடம் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்த நிலையில், பலரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கருமம்டா இன்னும் எத்தனை கொடுமைகளை பார்த்து தொலைக்கப் போறோமோ
படிக்க அனுப்புனாக்க ரோட்டுல குத்தாட்டம் போடுது
விழுப்புரம் அரசு பள்ளி மாணவி
ஏற்கனவே படிப்பில் பின்தங்கி இருப்பதாக அங்குள்ள நண்பர்கள் வருத்தத்தில் உள்ளனர் இதுல இது வேற pic.twitter.com/MN34c9seQR
பள்ளி சீருடையில் இப்படியா பொது வெளியில் நடனமாடுவது என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு பகுதியில் ஓடும் பேருந்தில் அரசு பள்ளி மாணவிகள் மது அருந்துவது போல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், பட்டப்பகலில் நடுரோட்டில் மாணவி குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.