இரவில் ஓயாத டார்ச்சர்.. கொதிக்கும் ரசத்தை கணவர் முகத்தில் ஊற்றிய மனைவி.. வெந்த முகத்துடன் கணவர் செய்த காரியம்

Published : Jun 14, 2022, 01:39 PM IST
இரவில் ஓயாத டார்ச்சர்.. கொதிக்கும் ரசத்தை கணவர் முகத்தில் ஊற்றிய மனைவி.. வெந்த முகத்துடன் கணவர் செய்த காரியம்

சுருக்கம்

குடும்ப சண்டையில் கணவன் நடராஜன் மீது சூடான ரசத்தை ஊற்றிய மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுபோதையில் சாலையில் படுத்து போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடும்ப சண்டையில் கணவன் நடராஜன் மீது சூடான ரசத்தை ஊற்றிய மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுபோதையில் சாலையில் படுத்து போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த நடராஜன் (30). இவரது மனைவி குப்பம்மாள்(28).  இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். தினமும் தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு எடுத்து வராமல் தினமும் குடித்து விட்டு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி சூடான ரசத்தை எடுத்து கணவர் முக்கத்தில் ஊற்றியுளள்ளார். 

இதனையடுத்து, மனைவி மீது புகார் கொடுக்க குடிபோதையில் காவல் நிலையம் சென்றார். கொதிக்க கொதிக்க ரசத்தை தன் முகத்தில் ஊற்றிய மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறு போதையில் புலம்பிய அவர் திடீரென சாலையில் சென்று படுத்தார்.

சாலையின் நடுவில் படுத்து கிடந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி மீது புகார் கொடுக்க வந்து ரகளையில் ஈடுபட்ட நபரால் புதுச்சேரி - கிருஷ்ணகிரி சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொதிக்கும் ரசம் பட்டதில் முகம் வெந்து காணப்பட்டவரை அங்கு சுற்றி இருந்தவர்கள் பரிதாபத்துடன் பார்த்து சென்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஐயோ! இதுக்கா உன்ன டாக்டருக்கு படிக்க வச்சேன்! எங்களை விட்டு போயிட்டியே! அமிர்த வர்ஷினி முடிவுக்கு இதுதான் காரணமா?
100 கி.மீ வேகம்! குறுக்கே வந்த வாகனம்! சுக்கு நூறாக நொறுங்கிய KTM பைக்! இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!