பைக் விபத்தில் கல்லூரி மாணவன் பலி! வேதனையில் கண்ணாடி பாட்டிலால் கழுத்தை அறுத்து கொண்ட நண்பர்..!

By vinoth kumar  |  First Published Nov 12, 2022, 10:49 AM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர்கள் திருமால். இவரது மகன் சீனிவாசன் (20). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்  படித்த வந்ததார். ஆறுமுகம் மகன் பிரபு (20). செஞ்சியில் கூரியர் சர்வீஸ் வேலை பார்த்து வருகிறார். 


செஞ்சி அருகே நண்பரின் பிறந்தநாளை கொண்டாட சென்ற போது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து இருந்த நண்பர் இறந்ததால் பைக்கை ஓட்டி சென்றவர் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர்கள் திருமால். இவரது மகன் சீனிவாசன் (20). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்  படித்த வந்ததார். ஆறுமுகம் மகன் பிரபு (20). செஞ்சியில் கூரியர் சர்வீஸ் வேலை பார்த்து வருகிறார். நண்பர்களான இருவரும் மற்றொரு நண்பர் பிறந்த நாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் கோணை கிராமத்திற்கு சென்றுக்கொண்டிருந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க ;- உஷாரான திமுக.. இந்த முறை பொங்கல் தொகுப்பு கிடையாது.. அதுக்கு பதில் ரூ.1000 வழங்க முடிவு.!

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம்  சாலையோரம் இருந்த ரியல் எஸ்டேட் விளம்பர பலகையில் மோதியது. இதில், பின்னார், அமர்ந்திருந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பிரபு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது, அவரது பெற்றோர் கதறி துடித்தனர். தன்னுடைய  நண்பரின் உயிழப்புக்கு தான் காரணமாகிவிட்டதான நினைத்து மனவேதனையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து தனது கழுத்தில் குத்தி கிழித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து பிரவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிரபு கஞ்சா போதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க ;-  Power Shutdown in Chennai: கனமழை பெய்கிற நேரத்துல முக்கிய ஏரியாக்களில் இன்று மின்தடை.. இதோ லிஸ்ட்..!

click me!