விழுப்புரத்தில் அண்ணா சிலையை சேதப்படுத்தி செருப்பு மாலை அணிவித்து அத்தோடு ஆ.ராசாவின் படத்தையும் வைத்து திமுக கொடியினால் சிலையின் முகத்தை மூடியும் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் அண்ணா சிலையை சேதப்படுத்தி செருப்பு மாலை அணிவித்து அத்தோடு ஆ.ராசாவின் படத்தையும் வைத்து திமுக கொடியினால் சிலையின் முகத்தை மூடியும் அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியார் திடலில் கடந்த 6ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆ.ராசா இந்து குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஆ.ராசா தொடர்பாக பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்த கோவை மாவட்ட பாஜக தலைவர், இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆ.ராசாவின் பேச்சை கண்டித்தும், பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகளை செய்ததை கண்டித்தும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோவையில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது.
undefined
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் உள்ள பேரறிஞர் முன்னாள் முதல்வர் அண்ணாவின் முழு உருவ சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. சிலையை சேதப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து, அதோடு ஆ.ராசாவின் படத்தில் கரும்புள்ளிகள் குத்தி திமுக கொடியினால் அண்ணா சிலையின் முகத்தை மூடியும் அவமதிக்கப்பட்டிருக்கிறது.
உடனே இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் அண்ணா சிலைக்கு அணிவித்திருந்த செருப்பு மாலை மற்றும் கொடியை அகற்றினர். ஆ.ராசாவின் படத்தையும் அகற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.