திருமணமான 6 நாளில் புதுப்பெண் தற்கொலை.. அடுத்த சில நிமிடங்களில் கணவர் எடுத்த விபரீத முடிவு.!

By vinoth kumar  |  First Published Sep 16, 2022, 2:57 PM IST

செஞ்சி அருகே திருமணம் முடிந்து அம்மா வீட்டிற்கு விருந்துக்காக சென்ற புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவனும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


செஞ்சி அருகே திருமணம் முடிந்து அம்மா வீட்டிற்கு விருந்துக்காக சென்ற புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவனும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை அடுத்த குந்தலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் முருகன் (30). திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மகள் சந்தியா (22) ஆகியோருக்கு கடந்த 9ம் தேதி மணமகன் இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.  புதுமண தம்பதி திருப்பதி கோயிலுக்கு சென்றுவந்த பின், மணமகளை சொந்த ஊரான செவரம்பூண்டிக்கு மறுவீடு அழைத்துச் சென்றுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. நாளை பணியில் சேர இருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் பலி.. திருமணமான ஒரே மாதத்தில் சோகம்.!

இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தியா வீட்டின் அருகே குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்த பொழுது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சந்தியாவை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இறுதியில் சந்தியா எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தகவலறிந்து மனைவியின் உடலை மருத்துவமனையில் பார்த்துவிட்டு இரவு முருகன் குந்தலம்பட்டு கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அங்கு தனது விவசாய நிலத்தில் இரவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 நாட்களே ஆன நிலையில் மனைவி இறந்த மன உளைச்சலில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  போதையில் 140 கிலோ மீட்டர் ஸ்பீடு!தூக்கி வீசப்பட்ட பெண் IT ஊழியர்கள் பலி!விபத்தை ஏற்படுத்தியவர் யார் தெரியுமா?

click me!