தமிழகத்தில் முதல் முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் பசுவுக்கு கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர்.
தமிழகத்தில் முதல் முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேலபட்டு கிராமத்தில் வீற்றுள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் அம்சவேணி என்ற பசுமாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராமத்தை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு 24 வகையான வளைகாப்பு கலவை சாதம் உட்பட 48 சீர்வரிசை தட்டுகளுடன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து பசுவுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி நீராடி மாலை அணிவித்து காலில் சலங்கை கட்டி வளைகாப்பு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. குழந்தை இல்லா தம்பதிகள் கலந்து கொண்டு பசுவுக்கு வளையல் அணிவித்தும், மஞ்சள் பூசியும் வணங்கினர்.
தலையில் மண்ணை போட்டுக்கொண்டு கெத்தாக காட்டுக்குள் சென்ற மக்னா யானை
மேலும் மெலப்பட்டு கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பசுவுக்கு வளைகாப்பு கொண்டாடப்பட்டதை சுற்றுவட்டார மக்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.