லீவு இருந்தாலும் பள்ளிக்கு செல்லுங்கள்... ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாவட்ட ஆட்சியர்..!

By vinoth kumar  |  First Published Dec 13, 2022, 11:03 AM IST

மாண்டஸ் புயல் கரையை கடந்த போதிலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருவதால் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். 


கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும்  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

மாண்டஸ் புயல் கரையை கடந்த போதிலும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருவதால் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.  இன்று விடுமுறை அளிக்கப்பட்டாலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Latest Videos

undefined

இதையும் படிங்க;- வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- விழுப்புரம் மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று விடுமுறை இல்லை.  அவர்கள் பள்ளிக்குச் சென்று பள்ளி தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியர்கள் பள்ளி கட்டிடங்களின் நிலைத்தன்மை, பள்ளி வளாகத் தூய்மை, மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறக்கப்படும் போது பாதுகாப்பான கல்வி சூழலை உறுதி செய்திடும் வகையில்  நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள பழைய பயன்பாடற்ற பள்ளி கட்டடங்கள் நிலை குறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை வழங்கம் வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க;-  இரவில் ஓயாத டார்ச்சர்.. கொதிக்கும் ரசத்தை கணவர் முகத்தில் ஊற்றிய மனைவி.. வெந்த முகத்துடன் கணவர் செய்த காரியம்

click me!