ஆதரவற்றோர் இல்லம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என்ன தான் செய்து கொண்டிருந்தன? இதன் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனரா? என்பது கண்டறியப்பட வேண்டும்.
அன்புஜோதி ஆதரவற்றோர் இல்லத்தில் ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் அதிர்ச்சியளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று சுமார் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரமம் முறையான உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மொட்டை அடித்து சங்கிலியால் கை, கால்களை கட்டிப் போட்டு சித்ரவதை செய்துள்ளனர். பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும், உரிமையாளர் ஜூபின் பேபி குரங்குகளை வளர்த்து கடிப்பதற்கு பழக்கப்படுத்தி வைத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி கூறியுள்ளார்.
undefined
இதையும் படிங்க;- பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.! குரங்குகளை வைத்து கடிக்க வைக்கும் கொடூரம்..! ஆசிரமத்தில் நடந்தது என்ன.?
இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்; குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் கடந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுவதை பார்க்கும் போது அங்கு பெரும் குற்றங்கள் நடந்திருக்கக் கூடும்.
ஆதரவற்றோர் இல்லம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என்ன தான் செய்து கொண்டிருந்தன? இதன் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனரா? என்பது கண்டறியப்பட வேண்டும்.
இதையும் படிங்க;- சட்டம் ஒழுங்கு எக்கேடு போனால் எனக்கென்ன இருக்கும் முதல்வர்! எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருக்காங்க! அண்ணாமலை
இல்லத்திலிருந்து எவ்வளவு பேர் கடத்தப்பட்டனர்? எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டனர்? என்பன உள்ளிட்டவை கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.