செஞ்சி அருகே பரபரப்பு! வாலிபர் கைது.. குற்றம்! பெண்ணின் மனதை திருடிவிட்டார்.. வைரலாகும் கல்யாண போஸ்டர்..!

By vinoth kumar  |  First Published Feb 10, 2023, 4:55 PM IST

தமிழகத்தில் வித்தியாசமாக போஸ்டர்கள், பேனர்கள் அடிக்கும் கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில், செஞ்சியில் திருமணத்திற்கு அடித்து இருக்கும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. 


தமிழகத்தில் வித்தியாசமாக போஸ்டர்கள், பேனர்கள் அடிக்கும் கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில், செஞ்சியில் திருமணத்திற்கு அடித்து இருக்கும் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. 

திருமணம் என்பது சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். அந்த திருமணத்தை  எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு  சிறப்பாக  செய்கிறோம். அதிலும்  திருமண  அழைப்பிதழில் பெரும் பங்கு உண்டு. அதேபோல், வித்தியாசமாக போஸ்டர்கள், பேனர்கள் அடிக்கும் கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அருண்,  கனகலட்சுமி திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, திருமணத்திற்காக மணமகன் அருணின் நண்பர்கள் வித்தியாசமாக போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளனர். இது தொடர்பான போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செஞ்சி அருகே பரபரப்பு வாலிபர் கைது..! 
குற்றம்: பெண்ணின் மனதை திருடிவிட்டார். 
தீர்ப்பு: மூன்று முடிச்சு போடுதல். 
கைது செய்யும் நாள் 10.2.2023 வெள்ளிக்கிழமை. 
கைது செய்யும் இடம்: மயிலம் முருகன் திருக்கோயில். 
தண்டனை வழங்கப்படும் இடம் மனோரஞ்சிதம் திருமண மண்டபம் செஞ்சி. 
கைதானவர் எம்.அருண். 
கைது செய்தவர் எஸ்.கனகலட்சுமி. 
...சாட்சிகள்...

click me!