விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
undefined
அதன்படி இந்தாண்டுக்கான பெருவிழா 18ம் தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மறுநாள் 19ம் தேதி மயானக் கொள்ளையும், 22ம் தேதி தீமிதி விழாவும், 24ம் தேதி முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் மார்ச் 4ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தகவல் தெரிவித்துள்ளார்.