விழுப்புரம் மாவட்டம் கோட்டங்குப்பம் அருகே மீன் வாங்கச் சென்ற பெண்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் விற்பனைக்காக மீன் வாங்க சென்ற பெண்கள் சிலர் சாலை ஓரம் அமர்ந்திருந்தனர். அப்போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வந்த கார் ஒன்று சாரையோரம் அமர்ந்திருந்த பெண்கள் மீது பயங்கரமாக மோதியது.
விழுப்புரம் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/jPj5t44Px2
— CMOTamilNadu (@CMOTamilnadu)இந்த விபத்தில் புதுகுப்பம் மீனவ பெண்கள் லட்சுமி(வயது 45), கோவிந்தம்மாள் (50) இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும் நாயகம், கோமலம், கெங்கையம்மாள், பிரேமா ஆகிய 4 பெண்கள் காயம் அடைந்து புதுவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கண்டிக்காமல் திரும்பி வந்தால் கருப்புச் சட்டை போராட்டம்! மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
பலத்த காயமடைந்துமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கங்கை அம்மாள், நாயகம் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.