விழுப்புரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Jun 24, 2023, 8:36 AM IST

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.


நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த பேருந்தை கும்பகோணத்தைச் சேர்ந்த நடராஜ்(வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். பேருந்தில் நாகப்பட்டினம், காரைக்கால், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 27 பயணிகள் இருந்துள்ளனர்.

பேருந்து வழக்கம் போல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வந்துகொண்டிருந்த நிலையில், மரக்காணம் அடுத்த தாழங்காடு என்ற பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் இருந்த 10 ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த நிலையில், பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

Latest Videos

நாங்க இருக்கோம்; ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு தொலைபேசியில் உறுதி அளித்து நம்பிக்கை ஏற்படுத்திய கனிமொழி

அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் பயங்கரம்! 50க்கும் மேற்பட்ட துணிக்கடையில் தீ விபத்து! 8 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.!

காயமடைந்த பயணிகள் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!