தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் இலவச நகரப் பேருந்துகள் வழக்கம்போல் ஊருக்குள் வருவதில்லை. இதற்கு முன்னர் நாள் ஒன்றுக்கு 5 முறை ஊருக்குள் வந்த பேருந்து தற்போது ஒரு முறை கூட முறையாக வருவதில்லை என மூதாட்டி புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம்தீர்த்தாபுரம் கிராமத்திற்கு சின்னசேலத்தில் இருந்து சரி வர அரசு பேருந்து வருவதில்லை எனவும், முன்பெல்லாம் ஐந்து சிங்கிள் வரும் ஆனால் தற்போது ஒரு சிங்கிள் கூட வருவதில்லை எனவும் மூதாட்டி ஒருவர் புலம்பும் வீடியோ சமூக வலைதளங்களில் மூலம் வைரலாகி வருகிறது.
undefined
அந்த வீடியோவில் மூதாட்டி "யாரு உன்ன பஸ்ஸுக்கு காசு வாங்காத உட சொன்னது, இப்ப அஞ்சு சிங்கிள் வந்த இடத்துல ஒரு சிங்கிள் கூட வர மாட்டேங்குது.. என்ன மாதிரி வயசானவங்க எல்லாம் எங்க போறது, வசதி இருக்கிறவங்க வண்டியில போவாங்க. வயசான ஆளு,நோயாளி நாங்க எங்க போறது எப்படி போறது, என அரசு பேருந்து பற்றி அழுது புலம்புகிறார்.
முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் - உரிமையாளர் அதிரடி
மேலும் மிஞ்சி போனா எங்க போகும் சின்ன சேலத்துக்கு போய் ஒரு ஊசி போட்டுட்டு மாத்திரை வாங்கிட்டு வா அதுக்கு கூட இந்த பஸ் வரமாட்டேங்குது எனவும் தொடர்ந்து சின்னசேலத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் வாசுதேவனுரில் கூட பேருந்துகள் நிக்காதாம் என அழுது புலம்பி தள்ளுகிறார்.
மதுக்கடைகள் முன்பு மது பாட்டில்களை உடைக்கும் போராட்டம் - கிருஷ்ணசாமி அறிவிப்பு
மூதாட்டி வள்ளியம்மை பேசிய வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.