கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அப்பாவி இளைஞரை 3 மணி நேரம் கட்டி வைத்து கொடூரமாக தாக்குதல் நடத்திய போதை ஆசாமியை கைது செய்யக் கோரி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மையனுர் கிராமத்தைச் சேர்ந்த பழனி, ராசாத்தி தம்பதியரின் மகன் ஐயப்பன். கிராமத்தில் வெகுளித்தனமாகவும், சிறுவர்களிடம் அதிகம் பழகக் கூடியவராகவும் அதேபோல் கிராமத்தில் உள்ளவர்கள் வேலை சொன்னால் உடனே செய்பவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐயப்பன் அம்மா (ராசாத்தி) மனவளர்ச்சி குன்றிய நிலையில் ஐயப்பன் தான் எல்லாம் வேலைகளையும் பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ஐயப்பனின் செல்போனில் வேறொரு நபர் அருணாச்சலம் மகன் ஆகாசிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. ஆனால் இந்த சம்பவம் ஐயப்பனுக்கு தெரியாத நிலையில், இது பேசியது ஐயப்பன் தான் என ஆகாஷ் நினைத்துக் கொண்டு முன் விரோதத்தை வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் போன் பேசிய சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆகாஷ் (23.06.23)நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஐயப்பனை தனது இருசக்கர வாகனத்தில் தொண்டனநந்தல் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி போட்டு நீதான் என்னிடம் போன் பேசினாய் எனக்கூறி கஞ்சா போதையில் மூன்று மணி நேரமாக அங்கு இருக்கக்கூடிய முட்களாலும், தடியினாலும் காட்டுதனமாக தாக்கியுள்ளார்.
பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்
மேலும் மூன்று மணி நேரம் ஐயப்பனை தாக்கிய ஆகாஷ் நீ ரோட்டோரம் போகக்கூடாது. இதைபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. நீ கரும்பு காட்டு வழியாக தான் செல்ல வேண்டும். ஊருக்குள்ள யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என ஐயப்பனிடம் சொல்லி மிரட்டி உள்ளார். இதற்குப் பயந்து போன ஐயப்பன் சாலை வழியாக செல்லாமல் 15 ஏக்கர் உள்ள கரும்பு காட்டில் மாலை 6 மணியில் இருந்து நடந்து ஊருக்குள் வந்துள்ளார்.
இதை எதுவுமே தெரியாத வெகுளித்தனமாக ஐயப்பன் மீண்டும் சிறுவர்களிடமே விளையாடியுள்ளார். அப்போது சிறுவர்கள் ஐயப்பன் மீது கை போட டேய் அங்க வலிக்குதுடான்னு சொல்லி உள்ளார். இதைப் பார்த்த கிராம இளைஞர்கள் ஐயப்பனின் சட்டையை கழற்றி பார்த்த போது ரண கொடூரமாக காயங்கள் ரத்தம் சொட்ட சொட்ட தென்பட்டுள்ளன, இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம இளைஞர்கள் முதற்கட்ட உதவியாக சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நெல்லையில் வாகன சோதனையில் விபத்து; லோடு வாகனம் மோதி இளைஞர் பலி - உறவினர்கள் மறியல்
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து தற்போது ஐயப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெகுளித்தனமான அப்பாவி இளைஞனை வணகாப்பு காடு பகுதியில் 3 மணி நேரம் கட்டி வைத்து ரணக் கொடூரமாக தாக்கிய போதை ஆசாமி செய்த செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஐயப்பன் தாக்கப்பட்டு முழுவதும் காயம் பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.