நாவல் பழத்திற்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட 3 பிஞ்சு குழந்தைகள்; விழுப்புரத்தில் சோகம்

By Velmurugan s  |  First Published Aug 7, 2024, 11:22 PM IST

திண்டிவனம் அருகே நாவல் பழம் பறிக்க முயன்று 3 சிறுவர்கள் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள்கள் பிரியதர்ஷினி (வயது 10), சுபாஷினி (8). இவர்கள் இருவரும் அதே பகுதியில் அருகில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளியில் 6 மற்றும் 4ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த விஜி என்பவரது மகன் சஞ்சய்யும் (10) படித்து வந்தார். இதனிடையே இவர்கள் மூவரும் புதன் கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் நாவல் பழம் பறிக்கச் சென்றதாக சொல்லப்படுகிறது.

 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி HMஐ உள்ளாடையோடு இழுத்து வந்த மக்கள்

Tap to resize

Latest Videos

undefined

மூவரும் மரத்தில் ஏறி பழத்தை பறிக்க முயன்றபோது காற்றின் வேகத்தால் மூவருமே ஆற்றில் தவறி விழுந்துள்ளனர். மேலும் காப்பற்றும்படி சிறுவர்கள் கூச்சலிட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவிலில் தீபம் ஏற்றிய நபர்; கடவுள் கண் முன்பே கரிக்கடையான சோகம் - தேனியில் பரபரப்பு

விபத்து தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓலக்கூர் காவல் துறையினர் உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாவல் பழம் பறிக்க முயன்று ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

click me!