2 சிறுமிகளை கூட்டாக வேட்டையாடிய உறவினர்கள்; 15 நபர்களுக்கு 20 ஆண்டு சிறை - விழுப்புரத்தில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Jul 16, 2024, 5:18 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் 2 சிறுமிகளுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த உறவினர்கள் 15 நபர்களுக்கு 20 ஆண்டகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த 7 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் இருவர் தங்களது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளனர். முதியவர்களின் அரவணைப்பில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட உறவினர்கள் சிலர் சிறுமியை பார்த்துக் கொள்வது போல் அவர்களிடம் அத்துமீறுவதையே வேலையாக் கொண்டிருந்தனர்.

தொடர் பாலியல் அத்துமீறல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளனர். இதனை அறிந்த பள்ளி ஆசிரியை இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் உறவினர்கள் சிறுமிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமிகளின் தாய் 2019ம் ஆண்டு பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி உடல்நிலை மிகவும் மோசமடைந்து கடந்த 2019ம் ஆண்டே உயிரிழந்தார்.

Tap to resize

Latest Videos

undefined

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பு; அணை கட்ட அனுமதியுங்கள் - டி.கே.சிவக்குமார் 

புகாரின் அடிப்படையில், உறவினர்களான தீனதயாளன், அஜித்குமார், பிரபா, பிரசாந்த், ரவிக்குமார், அருண், மகேஷ், ரமேஷ், துரைராஜ், மோகன், செல்வம், கமலக்கண்ணன், முருகன், துரைசாமி, செல்வம், சேகர் ஆகிய 15 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

30 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 15 வயது சிறுவன்; பேருந்து நிலையத்தில் சுத்துபோட்ட உறவினர்கள்

இந்நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி வினோதா இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதன்படி சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து ந்த 15 நபர்களுக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

click me!