மரக்காணத்தில் கடலில் கரை ஒதுங்கிய 2 சிறுமிகளின் உடல்கள்; குடும்ப பிரச்சினையால் குழந்தைகள் கொலை?

By Velmurugan s  |  First Published Jul 12, 2024, 11:38 AM IST

மரக்காணம் அருகே கடலில் இரு சிறுமிகளின் உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில் சிறுமிகளின் தந்தையை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவரது மனைவி கௌசல்யா. இந்த தம்பதிக்கு ஜோவிதா (4), சஸ்மிதா (18 மாதம்) என இரு குழந்தைகள் இருந்துள்ளனர். கணவன், மனைவி இருவரும் தங்கள் குழந்தைகளுடன் புதுவை காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தனர்.

இதினடையே கடந்த 2 தினங்களுக்கு முன்னர் ஆனந்தவேலு, கௌசல்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆனந்தவேலு தனது இரு குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான கூனிமேடு பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் நேரத்தில் ஆனந்தவேலு தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையில் இரவு வரை அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

ஆம்னி பேருந்துக்கு போட்டியாக களம் இறங்கும் அரசு சொகுசு பேருந்துகள்; கட்டணம் உயர்கிறதா? அமைச்சர் தகவல்

இந்நிலையில், இன்று காலை குழந்தை சஸ்மிதாவின் உடல் இறந்த நிலையில் கூனிமேடு பகுதியில் கரை ஒதுங்கியது. இதே போன்று சிறுமி ஜோபிதாவின் உடலும் அனுமந்தை குப்பம் கடற்கரையோரம் ஒதுங்கியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மரக்காணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திமுக அரசு என்னை கொலை செய்ய பார்க்கிறது; நீதிமன்ற வாசலில் சாட்டை துரைமுருகன் குமுறல்

மேலும் மாயமான ஆனந்தவேலுவை தொடர்ந்து தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேலு தனது குழந்தைகளுடன் கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தனது குழந்தைகளை மட்டும் கொன்றுவிட்டு அவர் தப்பில் ஓடிவிட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

click me!