
திமுக சட்டமன்ற உறுப்பினரின் மறைவைத் தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது.
இந்நிலையில், விக்ரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட கப்பியம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் இன்று காலை திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது.
கள்ளச்சாராய கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல் துறையும் தோல்வி அடைந்துவிட்டது - ராமதாஸ் கண்டனம்
அதன் பின்னர் புதுமண தம்பதியினர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக திருமணம் முடிந்தவுடன் மாலையும், கழுத்துமாக மணக்கோலத்திலேயே வந்து விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியம்புலியூர் அரசு பள்ளியில் உள்ள வாக்கு சாவடிக்கு வந்தனர். பின்னர் ஓட்டு போட வரிசையில் நின்று மணமகன் அஜித் தனது வாக்கை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து மணப்பெண் சந்தியாவும் தனது வாக்கினை பதிவு செய்தார்.