இடஒதுக்கீடு கோரி தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினால் மட்டுமே இந்த அரசு பணியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர் சங்கத்தின் 45ம் ஆண்டு விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் அச்சங்கத்தின் நிறுவனர் இராமதாஸ் சங்கத்தின் கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இராமதாஸ், “1980ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி வன்னியர் சங்கம் துவங்கப்பட்டது. அந்த நேரத்தில் 3 கோரிக்கைகள் அரசுக்கு முன்வைக்கப்பட்டன.
சாதிவாரி கணக்கெடுப்பு நடதி அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர் மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 20 விழுக்காடும், பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படு 18 விழுக்காடுக்கு பதில் 22 விழுக்காடும் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் நேரில் சென்று வாழ்த்து பெறுவார் - ராஜன் செல்லப்பா
இச்சங்கம் தொடங்கி 44 ஆண்டுகள் கடந்த 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இடஒதுக்கீடு வேண்டி தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் 7 நாள் சாலை மறியல் போராட்த்தை காட்டிலும் தீவரமாக ஒரு போராட்டத்தை நடத்தினால் தான் திமுக அரசு பணியும் அல்லது கொடுக்கும் என நம்புகிறோம்.
தற்போது உள்ள இளைஞர்கள் ஆர்வமாக துடிப்புடன் உள்ளனர். இவ்வளவு நாள் வஞ்சிக்கப்பட்டது யாரால்? எதனால்? என்று தெரியாமல் இருந்ததை இப்போது புரிய வைத்துள்ளோம். இளைஞாகள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே இப்போராட்டம் முந்தைய போராட்டத்தை விட கடுமையாக இருக்கும் என உங்கள் மூலமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.