ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சஞ்சனா (3), ரித்திகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. வெங்கடேசன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
வாலாஜா அருகே மனைவி இறந்த தூக்கத்தில் 2 பெண் குழந்தைகளுடன் கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (30). இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சஞ்சனா (3), ரித்திகா (1) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது. வெங்கடேசன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
undefined
இதையும் படிங்க;-
இந்நிலையில், நிர்மலாவுக்கும், அவரது மாமனார், மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடும் மனவேதனையில் இருந்த நிர்மலா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் நிர்மலா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் கணவருக்கு தெரியவர பெங்களூருவில் இருந்து வெங்கடேசன் ஊருக்கு விரைந்த மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு கதறினார். மனைவி இல்லாமல் குழந்தையை எப்படி வளர்ப்பு என சோகத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை தனது 2 பெண் குழந்தைகளுடன் வெங்கடேசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், 3 பேரின் உடல்கள் சிதறிய நிலையில் கிடந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த தூக்கத்தில் 2 குழந்தைகளுடன் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.