இறந்தும் பிறரை வாழ வைக்கும் 13 வயது சிறுவன்..! நெகிழ்ச்சியில் உறவினர்கள்..!

By Manikandan S R S  |  First Published Jan 31, 2020, 6:02 PM IST

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த ஜீவன்ராஜ், மூளை சாவடைந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதறி துடித்தனர். பின் சோகமான சூழலிலும் சிறுவனின் உடலுறுப்பைகளை தானம் அளிக்க முன்வந்தனர்.


வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே இருக்கிறது பாலாறு அணைக்கட்டு. இங்கு இலங்கை தமிழர்களுக்கு அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஏராளமான ஈழத்தமிழர்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் சின்னப்பா. ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகன் ஜீவன் ராஜ். 13 வயது சிறுவனான இவர், அந்த பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த இருதினங்களுக்கு முன்பாக வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஜீவன்ராஜ், எதிர்ப்பாராத விதமாக உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த ஜீவன்ராஜ், மூளை சாவடைந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், கதறி துடித்தனர். பின் சோகமான சூழலிலும் சிறுவனின் உடலுறுப்பைகளை தானம் அளிக்க முன்வந்தனர்.

அதன்படி இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கண்கள் ஆகியவை தானமாக அளிக்கப்பட்டது. இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி ஆகியவை சென்னையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னி, கண்கள் ஆகியவை வேலூர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தும் பிறரை வாழவைக்கும் சிறுவனை நினைவு கூர்ந்து உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

Also Read: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒன்னும் தப்பில்லையே..! துணை முதல்வரை சந்தித்து சரத்குமார் அதிரடி..!

click me!