டாஸ்மாக் சுவரில் ஓட்டை போட்டு கொள்ளை..! உயர்ரக சரக்குகள் அபேஸ்..!

Published : Jan 28, 2020, 05:20 PM ISTUpdated : Jan 28, 2020, 05:22 PM IST
டாஸ்மாக் சுவரில் ஓட்டை போட்டு கொள்ளை..! உயர்ரக சரக்குகள் அபேஸ்..!

சுருக்கம்

கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டிருந்தது. கடைக்குள் இருந்த விலை உயர்ந்த ரக சரக்குகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கிறது செட்டிதாங்கல் கிராமம். இந்த ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் அரசு மதுபான கடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடையின் உரிமையாளராக கிருஷ்ணன் என்பவர் செயல்பட்டு வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு பிறகு கடையை அடைத்து விட்டு கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலையில் வழக்கம் போல அவர் கடையை திறந்தார்.

அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டிருந்தது. கடைக்குள் இருந்த விலை உயர்ந்த ரக சரக்குகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. செய்வதறியாது திகைத்த கிருஷ்ணன், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

கொள்ளை நடந்த பகுதி ஆள்நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் மர்ம நபர்கள் துணித்து செயல்பட்டுள்ளனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான கடையின் சுவரில் துளை போட்டு கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: 'கலெக்டர்ல இருந்த எல்லாரையும் அவங்க கவனிக்கிறாங்க.. விட்டுரு'..! மணல் கடத்தலுக்கு ஆதரவாக வி.ஏ.ஓ வை மிரட்டிய வருவாய் அதிகாரி..!

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!