ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்திரம்பட்டு விஏஓவை போக்சோ சட்டத்தில் கைது செய்து மகளிர் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவளூர் கிராமம் சின்ன தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 43). இவர் நெமிலி தாலுகா உத்திரம்பட்டு கிராம விஏஓவாக பணியாற்றி வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் ராமதாஸ் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமதாஸ் குடிபோதையில் 11ம் வகுப்பு படிக்கும் தனது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
undefined
திடீரென எதிர் திசையில் பாய்ந்த சொகுசு கார்; மற்றொரு காருடன் மோதி 5 பேர் படுகாயம்
மனநலம் பாதிக்கப்பட்ட ராமதாசின் மகன் எதுவும் கண்டு கொள்ளாமல் வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். ஆய்வாளர் காஞ்சனா இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விஏஓ ராமதாசை கைது செய்தார். மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்; பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்