தமிழகத்தில் ஹோன்-ஹாய் நிறுவனத்தின் சார்பில் 1600 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்து 6000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியார் விடுதியில் தோல் தொழிற்சாலை தொழிலதிபர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்.பி.ராஜா கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழகத்தில் தொழில்துறை முதலீடுகள் குறித்து பாஜக பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் ஹோன்-ஹாய் நிறுவனத்தின் சார்பில் 1600 கோடி ரூபாய் முதலீட்டில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை ஏற்படுத்தி அதன் மூலம் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உருவாக்கப்படும். இதில் பாகிஸ்தான் நாடு மற்றும் ஹோனோவின் சேர்மன் யங்க் லியோ தொழில் துவங்க ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் அதிக அளவில் தொழில்துறை முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு நிச்சயம் சாதனை படைக்கும் என கூறினார்.
undefined
சென்னையில் காதலி ரயில் முன் தள்ளிவிட்டு கொலை? காதலனிடம் காவல்துறை தீவிர விசாரணை
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல் ஈஸ்வரப்பன், தொழில்துறை நிறுவனத்தின் தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.