திருப்பத்தூரில் பண்ணை குட்டையில் மூழ்கி 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

By Velmurugan s  |  First Published Jul 28, 2023, 4:08 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பண்ணை குட்டையில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு. ஆலங்காயம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை.


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் சுண்ணாம்பு பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நந்தகுமார், ரேவதி தம்பதி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருந்தார். இந்நிலையில், ரேவதி வீடு வீடாக சென்று பசும் பால் ஊற்றிவதற்காக சென்றுள்ளார்.

இந்நிலையில், தாயை தேடி 4 வயது சிறுவனும் சென்றுள்ளான். அப்போது  அருகே  உள்ள பண்ணை குட்டையில்  தவறி விழுந்து  மூழ்கியுள்ளார். பின்னர்  தாய் ரேவதி மற்றும் அவரது உறவினர்கள கோகுலை தேடியும் கிடைக்காததால்     பின்னர் பண்ணை குட்டையில் பார்த்த போது உறவினர்களுடன் தேடி பார்த்த போது சிறுவன் கோகுல் பண்ணை குட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

Tap to resize

Latest Videos

undefined

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் கல்லூரிக்கு சென்ற மகள், தாய் படுகாயம்

இதனை அடுத்து தகவலின் அடிப்படையில் ஆலங்காயம் காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடுகள் அதிகம் உள்ளதால் பண்ணை குட்டை வேண்டாம் என்று கூறியதாகவும், அதனை பொருட்படுத்தாமல் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பண்ணை குட்டை வெட்டியுள்ளனர். அதில் ஊற்று உருவாகி பண்ணை குட்டை நீர் நிரம்பி உள்ளதாகவும், உடனடியாக பண்ணை குட்டைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து சீறிப்பாய்ந்த தேஜஸ் போர் விமானம்

click me!