வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மது குடித்து சிகரெட் புகைத்து பட்டாக் கத்திகளுடன் கேங்ஸ்டர் போல ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
வேலூர் வெங்கடாபுரம் அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவில், வேலூர் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஞானம் என்கிற சி.எல்.ஞானசேகரன். இவரது மகன் சரண். இவர் நண்பர்களுடன் சேர்ந்து வேலூர் அலமேலுமங்காபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மது குடித்து சிகரெட் புகைத்து பட்டாக் கத்திகளுடன் கேங்ஸ்டர் போல ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏழை குழந்தைகள்உணவு அருந்தும் இடத்தை பாராம மாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சத்துவாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திமுக பிரமுகரின் மகன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.