செல்போன் பேசியபடி ஊசி போட்ட செவிலியர்..! அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்..!

Published : Dec 19, 2019, 06:02 PM IST
செல்போன் பேசியபடி ஊசி போட்ட செவிலியர்..! அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்..!

சுருக்கம்

அரசு மருத்துவமனை ஒன்றில் நோயாளிக்கு செவிலியர் செல்போனில் பேசியபடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அரசு மருத்துவமனை இருக்கிறது. இங்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு நோயாளிக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவர் செல்போனில் பேசியபடி ஊசி போட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

நேற்று முன்தினம் பணியில் இருந்த கல்பனா என்கிற செவிலியர், நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். அப்போது செல்போனில் பேசியபடியே அவர் ஊசி போட்டுள்ளார். இதை அங்கிருந்த நபர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கும் சென்றது. உடனடியாக சம்பந்தப்பட்ட செவிலியரை அழைத்து அவர் விசாரணை மேற்கொண்டார். 

செவிலியர் கல்பனா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!