அனாதை பிணங்களுக்கு ஆதரவளிக்கும் இளைஞர்..! முன்னின்று இறுதிச் சடங்குகள் செய்யும் நெகிழ்ச்சி சம்பவம்..!

By Manikandan S R SFirst Published Dec 19, 2019, 5:28 PM IST
Highlights

வேலூர் அரசு மருத்துவமனையில் ஆதரவில்லாமல் இல்லாமல் இருந்த 5  அனாதை பிணங்களை பெற்று சமூக சேவகர் ஒருவர் இறுதிச் சடங்குகள் செய்துள்ளார்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் மணிமாறன். பல்வேறு சமுதாய நலப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் சமூக சேவகராக திகழ்ந்து வருகிறார். ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுடன் அவர்களை காப்பகங்களில் அனுமதிக்கும் பணியையும் செய்கிறார். இது மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளில் இறுதி சடங்குகள் செய்ய ஆள் இல்லாமல் இருக்கும் அனாதை பிணங்களை முறைப்படி பெற்று இவரே இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தும் வருகிறார்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஐந்து பிணங்கள் பல மாதங்களாக யாரும் உரிமை கொண்டாடாமல் இருந்திருக்கிறது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட மணிமாறன் அவரது சொந்த செலவில் 5 பிணங்களை அடக்கம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் முறையான அனுமதியைப் பெற்று அரசு மருத்துவமனையில் இருந்த ஒரு மூதாட்டி பிணம் மற்றும் நான்கு முதியவர்கள் பிணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் அவற்றை பாலாற்றங்கரை சுடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்.

மணிமாறனின் இந்த சமூக சேவையை காவல்துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

click me!