ராணிபேட்டையில் பயங்கரம்: திருமணத்திற்கு சென்ற நபர் மணல் லாரி மோதி பலி

By Velmurugan s  |  First Published Mar 4, 2023, 11:41 AM IST

ராணிபேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் நரசிங்கபுரம் பகுதியில் திருமணத்தில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த மருதாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் தனது சகோதரியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக பெல் நரசிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு இருசக்கர வாகனத்தில் தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். 

அக்ராவரம் பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மணல் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏழுமலை என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

Latest Videos

திருச்சி மக்களின் உணர்வுகளில் ஒன்றான காவிரி பாலம் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் உயிரிழந்த ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்ற நபர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!