ராணிபேட்டையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி உமாமகேஸ்வரி. இவர் இன்று காலை சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்னை நோக்கி வந்த ஆற்காடு அடுத்த திமிரியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் மூதாட்டியின் மீது வேகமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் உமாமகேஸ்வரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உமாமகேஸ்வரியின் உறவினர்கள், ஆத்திரத்தில் இளைஞரை தாக்க முயன்றுள்ளனர். அப்போது காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் அவர்களை தடுத்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
undefined
தமிழ் அறிஞர்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டும் ராமதாஸ் அழைப்பு
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை - தமிழகம் இடையே குட்டி விமான சேவை