மீன் பிடிப்பதற்காக ஏரிக்கு சென்ற கூலி தொழிலாளி மற்றும் மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி

By Velmurugan s  |  First Published Feb 13, 2023, 11:53 AM IST

ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மீன் பிடிப்பதற்காக ஏரிக்குச் சென்ற கூலித் தொழிலாளியும், அவரது மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலயம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). கூலி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவரது மகன் பரத்ம் (வயது 13) ஆறுமுகமும் இணைந்து அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

அப்போது ஆறுமுகம் மீன்பிடிப்பதற்காக ஏரியில் இறங்கி வலையை விட்டுக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி நீரில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்ட ஆறுமுகத்தின் மகன் பரத் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்த போது அவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆற்காடு காவல் துறை மற்றும்  தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மூழ்கிய ஆறுமுகம் மற்றும் அவரது மகன் பரத் ஆகியோரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஓட ஓட வெட்டி கொலை

இருப்பினும் பல மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு ஆறுமுகம் மற்றும் அவரது மகன் பரத் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டனர். பிறகு  இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் இரும்பு துண்டு; நோயாளிகள் பதற்றம்

ஆற்காடு அருகே ‌மீன் பிடிப்பதற்காக சென்ற தந்தை மகன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!