வேலூரில் காவல் ஆய்வாளர் உட்பட 12 போலீசார் கூண்டோடு மாற்றம்... குற்றங்களை கட்டுப்படுத்தாததால் அதிரடி நடவடிக்கை!

By Narendran SFirst Published Feb 8, 2023, 11:42 PM IST
Highlights

வேலூரில் 11 போலீசாரை கூண்டோடு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

வேலூரில் 11 போலீசாரை கூண்டோடு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். முன்னதாக கடந்த 5 ஆம் தேதி லத்தேரி பேருந்து நிலையத்தில் அதிமுக பிரமுகர் பாபு மற்றும் அவரது நண்பர் சுதாகர் ஆகியோர் அங்கு மதுபோதையில் தகராறு செய்த நபரை தடுக்க முயன்ற போது மதுபோதையில் இருந்தவர் பாபுவையும் சுதாகரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.

இதையும் படிங்க: டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் திருட்டு

இதில் பாபுவுக்கு 7 இடங்களில் வெட்டுக்காயம், சுதாகருக்கு ஓரிரு இடங்களில் வெட்டுக்காயமும் ஏற்பட்டது. இருவரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. இந்த நிலையில் லத்தேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் உட்பட 11 போலீசாரை  கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி ரயில் நிலையத்தின் புதிய தோற்றம்... பிரம்மிக்க வைக்கும் புகைப்படங்கள்!!

ரங்கநாதன், பாஸ்கரன், வினோத், சந்திரசேகரன், தட்சிணாமூர்த்தி, தீர்த்தகிரி, சந்தோஷ், லோகேஸ்வரன், சந்திரசேகரன், ராஜசேகரன், புகழேந்தி ஆகியோர் பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். லத்தேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை சரிவர கட்டுப்படுத்தாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!