
ராணிப்பேட்டை மாவட்டம் எம்ரால்டு நகர் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த தம்பதியர் குருசாமி லட்சுமி. இவர்கள் இருவரும் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் படையாற்றி வருகின்றனர். இருவரும் தொழிற்சாலையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எம்ரால்டு நகர் பகுதியில் சாலையை கடக்கும் பொழுது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தம்பதியர்களான குருசாமி மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து சாலையில் பயணம் செய்த பொதுமக்கள் உடனடியாக சிப்காட் காவல் துறையினருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையி்ல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் வாலாஜாப்பேட்டை மருத்துவமனையில் குருசாமி மற்றும் லட்சுமி ஆகிய இருவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் வேலூர் அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற இந்த விபத்து சம்பவம் குறித்து சிப்காட் காவர் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து அண்ணன், தம்பி இருவர் பலி