திடீரென ஆயிரக்கணக்கில் போலீசார் குவிப்பு..! வாணியம்பாடியில் பரபரப்பு..!

By Manikandan S R SFirst Published Dec 20, 2019, 1:17 PM IST
Highlights

குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாணியம்பாடியில் இன்று மதியம் போராட்டம் நடைபெற இருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்னர்.

அண்மையில் பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. மாணவர் அமைப்புகளும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி போராடி வருகின்றனர். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து பலர் தாக்கப்பட்டனர். அதை எதிர்த்து நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது.

தமிழகத்திலும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக 23ம் தேதி மாபெரும் பேரணி நடக்க இருக்கிறது. இதில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக இன்று மதியம் போராட்டம் நடக்கிறது. இதில் கட்சி சார்பற்று பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.

இப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இஸ்லாமிய அமைப்புகள் என பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இதனால் 2000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் போலீசாருக்கு மேல் வாணியம்பாடியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு பணிக்காக 3 எஸ்.பி, 1 ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி., மற்றும்  800 காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிறைந்து காணப்படுகிறது.

click me!