வேலூர் சிஎம்சியில் துரை தயாநிதி.. உடல்நிலை எப்படி இருக்கிறது? திடீரென நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர்!

By vinoth kumarFirst Published Apr 2, 2024, 12:55 PM IST
Highlights

சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்த துரை தயாநிதிக்கு டிசம்பர் 6-ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதி உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். 

சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்து வந்த துரை தயாநிதிக்கு டிசம்பர் 6-ம் தேதி திடீரென மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு மருத்துவர்கள் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவருக்கு மூளையில்  சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவருடைய உடல் நலம் குறித்து தொடர்ச்சியாக மு.க ஸ்டாலின் அவர்களும் நேரில் சென்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி கடந்த மாதம் மார்ச் 14ம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: பாஜகவை எதிர்க்க துணிவு இல்லாத இபிஎஸ் எதுக்கு அதிமுகவிற்கு தலைமை ஏற்குறீங்க? வச்சு விளாசும் கே.சி.பழனிசாமி!

இந்நிலையில், வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று திமுக பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் இன்று கார் மூலம் வேலூர் வந்தனர். அப்போது வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை தயாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிய முதல்வர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்த பிறகு மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

click me!