விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலே தேவையில்லை; திமுக வெற்றி என அறிவித்துவிடலாம்; அன்புமணி விரக்தி

By Velmurugan sFirst Published Jul 4, 2024, 5:46 PM IST
Highlights

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி, தேர்தல் நடத்தும் முன்பே திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம் என தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்கள் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், கள்ளச்சாராயம் விற்க கூடாது என்று சட்டமன்றத்தில் கடுமையான சட்டம் கொண்டு வந்தார்கள். திமுக ஆட்சியால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது. கள்ளச்சாராயம் தொடர்பாக சட்டத்தை கொண்டு வந்தால் சட்டத்தை மதிக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த வேண்டும். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் அண்மையில் ஒருவர் கள்ள சாராயத்தால் இறந்துள்ளார். இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சார சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் சிபிசிஐடி மீது மரியாதை உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை  வேண்டும். இதற்குக் காரணம் அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அதனால் தான் சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறோம். இந்த சம்பவத்தில் அரசியல்வாதிகள் யார் யார் என்பது முதலமைச்சருக்கு தெரியாதா?

காஞ்சியில் அடைக்கலம் தேடி வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது

கள்ளச்சாராய சம்பவத்தினால் மீண்டும் உயிர் பலிகள் ஏற்படக்கூடாது என்பதற்காக  சிபிஐ விசாரணை கோரி உள்ளோம். தமிழ்நாட்டில் நிர்வாகம் சரி இல்லை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர், 30 எம்பிக்கள் அந்தப் பகுதியில் முகாமிட்டு பணத்தை வழங்கி வருகின்றனர்.

கணவனின் தகாத உறவால் மனம் உடைந்த மனைவி விபரீத முயற்சி; 4 வயது குழந்தை துடிதுடித்து பலி

பஞ்சாயத்து தேர்தலை விட  மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் அதிகாரி ஆர்டிஓ. அவர் என்ன செய்ய முடியும்? அங்குள்ள அமைச்சர்களை எதிர்த்து தேர்தல் அதிகாரி பேச முடியுமா? திமுக எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து பணம் கொடுத்து வருகின்றனர். பொது மக்களை அடைத்து, பணத்தை கொடுத்து தங்க வைத்துள்ளனர். இது ஒரு தேர்தலா?  இப்படி ஒரு தேர்தல் நடத்துவதற்கு முன்பாகவே திமுக வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

click me!