Crime: கணவனின் தகாத உறவால் மனம் உடைந்த மனைவி விபரீத முயற்சி; 4 வயது குழந்தை துடிதுடித்து பலி

Published : Jul 04, 2024, 05:15 PM IST
Crime: கணவனின் தகாத உறவால் மனம் உடைந்த மனைவி விபரீத முயற்சி; 4 வயது குழந்தை துடிதுடித்து பலி

சுருக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் தனது குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் வசிப்பவர் குப்பன் மகன் கணபதி. இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த வினோதினியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவரின் மனைவி சத்யாவிற்கும் தன்னுடைய கணவணனுக்கும் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவின் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் ரகசிய வீடியோ அடங்கிய செல்போன் வினோதினிக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.

காஞ்சியில் அடைக்கலம் தேடி வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது

இந்நிலையில் அந்த செல்போனை வாங்குவது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி வினோதினியை, கணவன் கணபதி கடுமையாக தாக்கியதால் மனமுடைந்த வினோதினி தன்னுடைய நான்கு வயது குழந்தையுடன் அருகாமையில் இருந்த கிணற்றில்  குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தையுடன் குதித்த வினோதினியை காப்பாற்றி உள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக குழந்தை கிணற்றில் நீருக்குள் மூழ்கியதால் திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி குழந்தையை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பார்த்த எங்களுக்கு “விஜய் ஒரு சுண்டைக்காய்” - அர்ஜூன் சம்பத் காட்டம்

இந்நிலையில் சம்பவம் அறிந்த சத்யாவும் என்ன செய்வது என்று அறியாமல் பதட்டத்தில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவிக்கு ஏற்பட்ட தகராறு காரணமாக நான்கு வயது குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்த நிலையில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!