வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- ஆந்திரா, ஒடிஷா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
undefined
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓடிசா, அந்தமான் கடலோர பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.