தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்களான வேலூர், ரணிப்பட்டை, சேலம், தர்மபுரி, திருச்சி கரூர் புதுக்கோட்டை, மதுரை சிவகங்கை, விருதுநகர் திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
undefined
அதனை தொடர்ந்து, வரும் 23, 24, 25 தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும், ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 25 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும், 22 - 23ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 24 வரை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.