அடுத்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
undefined
அதேபோல, ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் டாஸ்மாக் கடை இயங்குமா? என்ற ஐயம் குடிமகன் மத்தியில் எழுந்தது.
இதனையடுத்து, டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசு முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளான 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.