அப்போது விளையாடிக்கொண்டிருந்த பேரன் ருத்ரேஷ், அங்கிருந்த தின்பண்டத்தை சாப்பிட்டுள்ளான். அங்கிருந்த மதுவையும் குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து ருத்ரேஷ் மயங்கி விழுந்தான்.
குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த சுகர்மில் அண்ணா நகர் கன்னிகோயில் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி (62) தொழிலாளி. இவரது மகன் சுந்தரம், மகள் விஜயா இருவருக்கும் திருமணமாகிவிட்டது. விஜயாவுக்கு ருத்ரேஷ் (4) உட்பட 2 மகன்கள். சின்னசாமி தினமும் மது வாங்கி வந்து வீட்டில் வைத்து குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை சின்னசாமி வீட்டில் மது குடித்துள்ளார். மீதியுள்ள மது மற்றும் தின்பண்டங்களை அங்கேயே வைத்துவிட்டு தூங்கிவிட்டாராம்.
undefined
அப்போது விளையாடிக்கொண்டிருந்த பேரன் ருத்ரேஷ், அங்கிருந்த தின்பண்டத்தை சாப்பிட்டுள்ளான். அங்கிருந்த மதுவையும் குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து ருத்ரேஷ் மயங்கி விழுந்தான். சத்தம் கேட்டு எழுந்த சின்னசாமி, பேரன் மது குடித்து மயங்கியதை அறிந்து அதிர்ச்சியில் அவரும் மயங்கி விழுந்தார்.
உடனே தாத்தா, பேரன் இருவரையும் குடும்பத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சின்னசாமியை வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். பின்னர், சிறுவன் ருத்ரேஷை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடித்து தாத்தா, பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.