திருச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தலைக்கவசத்தை எடுத்து கொடுக்கச் சென்ற போக்குவரத்துக் காவலர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி கண்டோன்மென்ட் போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மன்னார்புரம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களின் தலைக்கவசம் ஒன்று வண்டியிலிருந்து கீழே நடுரோட்டில் விழுந்துள்ளது.
இதை கண்ட காவலர் ஸ்ரீதர் அந்த தலைக்கவசத்தை எடுத்து கொடுப்பதற்காக வேகமாக சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது. இதில் ஸ்ரீதர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
undefined
டெல்லி கூட்டணியில் பாமக உள்ளது; தமிழ்நாடு கூட்டணியில் பாமக இல்லை - அன்புமணி விளக்கம்
இந்த விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ரியல் எஸ்டேட் அதிபர் மணிவேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சியில் வாலிபர்கள் பெரும்பாலானோர் தலைக்கவசத்தை தலையில் அணியாமல் இருசக்கர வாகனத்தின் முன்னால் வைத்துக்கொண்டோ அல்லது கண்ணாடியிலோ மாட்டிக் கொண்டு செல்கிறார்கள்.
நெடுஞ்சாலை ஓரமாக வாகன ஓட்டிகளுக்கு ஒய்யாரமாக போஸ் கொடுத்த புலி
இது போன்று தலைக்கவசத்தை அஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு பயணம் செய்யும் பொழுது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.